கம்பன் போட்டி

#KambanFM 75வது பதிவை எட்டியுள்ளதை முன்னிட்டு ஒரு ஜாலி போட்டி. இதில் வெற்றி பெறுவோருக்கு கம்ப ராமாயணம்பற்றிய ஒரு நல்ல புத்தகத்தைப் பரிசாக வழங்க நானும் நண்பர் ஜிராவும் எண்ணியுள்ளோம்.

எந்தப் புத்தகம்?

கம்பனையும் ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பேசும் இந்நூலின் தலைப்பு ‘அருளிச்செயல் அமுதமும், தொல்புகழ் அமுதமும்’. எழுதியவர் என். எஸ். கிருஷ்ணன் ஸ்வாமி. இந்நூல் பற்றி மேலும் அறிய: http://dinamani.com/book_reviews/article1327518.ece

இப்போது, போட்டிக்கு வருவோம்.

First, the good news, இந்தப் போட்டியில் கலந்துகொள்ள நீங்கள் கம்பனைப் படித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. நிறைய சினிமாப் பாட்டுக் கேட்டிருந்தாலே போதும் 🙂

ராமாயண பாத்திரங்கள் எவையெல்லாம் தமிழ்த் திரைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்று கண்டறிவது, பட்டியலிடுவதே இந்தப் போட்டியின் நோக்கம். ’இதிலும் சினிமாவா?’ என்று கோபிக்கவேண்டாம். அதிகப் பேர் பங்கேற்றால்தானே போட்டி ஜாலியாக இருக்கும்?

போட்டிக்கான நிபந்தனைகள் இதோ:

1. திரைப்படத்தில் வந்த தமிழ்ப் பாடல்கள்மட்டுமே, தனிப்பாடல்கள் ஆகாது, தமிழ் அல்லாத பாடல்கள் ஆகாது

2. ஒரு பாத்திரத்துக்கு ஒரு பாடல், ஏற்கெனவே பயன்படுத்திய பாடலை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக, ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’ என்ற பாடலை ராமனுக்குப் பயன்படுத்திவிட்டால், சீதைக்கும் அதே பாடலைப் பயன்படுத்தக்கூடாது

3. ஒரே பாத்திரம் வெவ்வேறு பெயர்களில் வந்தால், வெவ்வேறு பாடல்களைத் தரக்கூடாது, உதாரணமாக, ராமனுக்கு ஒரு பாட்டு, ராகவனுக்கு ஒரு பாட்டு, சீதைக்கு ஒரு பாட்டு, ஜானகிக்கு ஒரு பாட்டு என்றால் அது போங்கு 🙂

4. சில பாடல்களில் வெவ்வேறு ராமாயண பாத்திரங்கள் மொத்தமாக வரும், அப்போதெல்லாம் அதனை rare பாத்திரங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், easy பாத்திரத்துக்குப் பயன்படுத்தி வீணடிக்காதீர்கள். உதாரணமாக, ‘ராமன் கதை கேளுங்கள்’ என்ற பாடலை, ராமன் / சீதைக்குப் பயன்படுத்துவதைவிட அதிகம் பாடல்களில் இடம் பெறாத ஜனகனுக்குப் பயன்படுத்தலாம் அல்லவா?

5. பாடல்கள் அனைத்தையும் ஒரே பின்னூட்டமாக இந்தப் பதிவில் தரவேண்டும், தனித்தனியே தரக்கூடாது

6. பின்னூட்டங்கள் உடனுக்குடன் Approve செய்யப்பட்டு எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்பதால், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களை இட்டால், முதலாவதாகத் தந்ததே கருத்தில் கொள்ளப்படும்

7. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு யார் அதிகப் பாடல்களைச் சொல்கிறார்களோ, அவர்கள் விரும்பும் இந்திய முகவரிக்குப் புத்தகப் பரிசு அனுப்பிவைக்கப்படும்

8. இன்று தொடங்கி, 21 டிசம்பர்வரை பாடல்களைப் பட்டியலிடலாம்

9. As Usual, நடுவர்கள் (ஹிஹி, நாங்கதான் 😉 தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது

அம்புட்டுதான். பட்டியல் போட ஆரம்பிங்க. வாழ்த்துகள் 🙂

***

என். சொக்கன் …

17 12 2012

Update:

உற்சாகமாகக் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. திரு. மணிவேல் அவர்கள் அதிக எண்ணிக்கையிலான பாத்திரங்களைப் பாடல்களில் தந்து வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துகள்.

திரு. மணிவேல் அவர்களுக்கு, பரிசுப் புத்தகத்தைக் கூரியரில் அனுப்புவது தொடர்பாக உங்களுக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், நேரம் உள்ளபோது பதில் எழுதவும், அல்லது, nchokkan@gmail.comக்கு உங்கள் இந்திய அஞ்சல் முகவரியை அனுப்பிவைக்கவும். நன்றி.

Advertisements

19 thoughts on “கம்பன் போட்டி

 1. Prasannaa S (@tcsprasan)

  1. Raman : Ragavane Ramana Ragunadha – Ilamai Kalangal
  2. Seethai : Vaidhehi Raman – Pagal Nilavu
  3. Hanuman : Jai Chiranjeevi – Kaadhal Devathai
  4. Ravanan : Veenai Kodiudaya – Sampoorna Ramayanam : http://www.youtube.com/watch?v=7AppYkc5vL0
  5. Dasarathan : Thavamuni – Sampoorna Ramayanam – http://www.youtube.com/watch?v=U6kzBqB2L_o
  6. Koushalyai : Laali Laali – Sippikkul Muthu
  7. Kaikeyi : Ramayaname Sri Ramayaname – Sri Rama Rajyam
  8. Soorpanaka : Seetha rama Saritham : Sri Rama Rajyam
  9. Sumithra : Devargal thithikka – Sri Rama Rajyam
  10. Shathrugnan : Jagam Pugazhum Punniya kadhai – Lava kusa – http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000559&lang=en (this has almost all the characters name 🙂 )
  11. Janakan : Raman Kathai Kelungal – Sippikul Muthu
  12. sabari – sabarikku ramanum – sampoorna ramayanam

 2. Latha

  ராமன், சீதை-ஜானகி தேவி ராமனை தேடி – சம்சாரம் அது மின்சாரம்
  ராமன், சீதை-வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் – பஞ்சதந்திரம்

 3. Latha

  ராமன், ராவணன் – ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல – முள்ளும் மலரும்
  ஹனுமான்,புள்ளி மான்(!!!) – தேவதை போல் ஒரு பெண் இங்கு – கோபுர வாசலிலே

 4. சின்னக் கண்ணன்

  ராமன் – ராமனுக்கு மன்னன் முடி சரி தானே நன்மையும் ஒருக்காலே; -பானுமதி- இப்படியும் ஓரு பெண்

  வைதேகி – வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ – மூன்று தெய்வங்கள்
  அனுமான் –அர்ச்சு\னன் போலே அழகிருக்க அனுமார் ஜாதியைப் பிடித்தேனே –போலீஸ்காரன் மகள்
  ராவணன் – சோகமில்லை சொந்தம் யாருமில்லை ராவணனின் நெஞ்சில் காமமில்லை – கோகுலத்தில் சீதை
  தசரதன் – தசரதா புரிந்ததா ஹரிகதா தெரிந்ததா – நெற்றிக்கண்
  ஜனகன் – ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்
  கூனி – கொடியவள் தான் கூனி (தசாவதாரம் பழசு)
  கடோத்கஜன் – கலாதரா.கடோத்கஜா (எங்கிட்டுப்பா ராமாயணத்துல கடோத்கஜன் வந்தார்னா.ஏதோ அந்தப்பக்கமா வந்தாராம்!)
  கொசுறு –அனுமான் –மறுபடி- ராமசாமி தூதன் நானடா அடே ராவணா என்பேர் அனுமானடா(டிகே பகவதி வானொலி நாடகத்தில் வந்த பாட்டு)

 5. Venkatesh A R

  1.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்……”ராவணன்”…முள்ளும் மலரும்.
  2.ராமனுக்கு மன்னன் முடி ….”ராமன்” பத்து மாத பந்தம்
  3.ஜனகனின் மகளை….”ஜனகர்”,…ரோஜாவின் ராஜா
  4.ஜானகி தேவி…..”ஜானகி” “சீதா”….சம்சாரம் அது மின்சாரம்.
  5.சபரி மலையில் வளர் ….”சபரி”…ஸ்வாமி ஐயப்பன்.
  6.திருமணம் காணும் வரை “தசரதன்” போல வாழ முயற்சிகள் தொடங்கி விட்டேன் (இளமை விடுகதை..பாடலின் ஆரம்பம்)…..”தசரதன்”…வரலாறு.
  7.பரமேஸ்வரி, ராஜேஸ்வரி……”மண்டோதரி,” குண்டோதரி பெண்பார்க்க வருவாயடி…..”மண்டோதரி”….எங்க ஊர் ராஜா.
  8.தாரா” தாரா வந்தாரா? சங்கதி ஏதும் சொன்னாரா?…”தாரை” (வாலியின் மனைவி)..படம் பெயர் தெரியவில்லை
  9. ஜகன் புக்ழும் புண்ய கதை….எந்த பாத்திரம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்..
  10.ஸ்ரீராமன், ஸ்ரீதேவி, …..”ராமன்”…டௌரி கல்யாணம்…

 6. Venkatesh A R

  10.கங்கை வேடன் (குகன்)தன்னை ராமன் தோழன் என்று சொன்னானே(நானொரு கோவில் நீயொரு தீபம்)……”குகன்”.நெல்லிக்கனி.
  11. ஒரு வகையின் நானொரு “அகலிகை”…(நானொரு கதாநாயகி)…”அகலிகை….மூன்று முடிச்சு
  12.ராமா ராமா கிட்ட வில்லு கேட்டேன் (”ராமர்”)…வில்லு…
  13…அட அனுமந்தா, அட கிஷ்கிந்தா(எங்க பிள்ள தஙகபிள்ள யாருக்கு கிடைக்குமப்பா)…”அனுமன்”…மழலைப் பட்டாளம்

 7. Venkatesh A R

  14.மனம் கெட்டும் ”தசரதன்” உயிர் விட்டதும் பெண்ணாலே.(ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே) “தசரதன்”……திருமதி ஒரு வெகுமதி.
  15. இந்திரஜித் இந்திரஜித் இந்திரஜித் (எடக்கும் முடக்கான சரக்கு)…..”இந்திரஜித்”……..கலைஞன்.

 8. மணிவேல்

  1.தசரதன் – தேவி ஸ்ரீதேவி – தசரதனின் திரு மகனை
  2.கௌசல்யை(கோசலை)-சிப்பிக்குள் முத்து – லாலி லாலி வரம் தந்த (கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே)
  3.கைகேயி – ஸ்ரீ ராம ராஜ்யம் – ராமாயணமே ஸ்ரீ ராமாயணமே (கலவரம் உண்டாச்சு கைகேயி சினம்)
  4.சுமித்திரை-தசாவதாரம்- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை (நலமிகு சுமித்திரை செல்வர்கள்)
  5.கௌசிகர் – ஸ்ரீ ராகவேந்திரர் – ராம நாமம் (கெளசிக மாமுனி யாகம் காத்தான்)
  6.வசிஷ்டர் – சம்பூர்ண இராமயாணம் – மக்கள் பிறந்தது எண்ணியே (குல குரு வசிஷ்டர் குதுகுலமே)
  7.ஜனகன் – ரோஜாவின் ராஜா – ஜனகனின் மகளை மணமகளாக
  8.ராமன் – வரப்பிராசதம் – கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
  9.லட்சுமணன் – ராம் லட்சுமண் – நல்லது நடக்கட்டும் ராஜா (ராமன் நான்தான் லட்சுமண் நீதான்)
  10.ஜானகி/சீதை – சம்சாரம் அது மின்சாரம் – ஜானகி தேவி ராமனைத் தேடி
  11.அனுமான் – ப்ரியா – ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே அனுமான் உன்னை
  12.பரதன்-தசாவதாரம்- செய்யோன் ஒளி (தேடி சென்றான் பரதன்)
  13.சத்ருகணன் -ஸ்ரீ ராம ராஜ்யம்-தேவர்கள் தித்திக்க (ராம,லட்சுமண,பரத,சத்ருகன மைந்தர்கள்)
  14.ஊர்மிளை – சம்பூர்ண இராமயாணம் – தவமுனி விஸ்வாமித்திரன் பின்னாலே (இலக்குவன், பரதன் முறையே ஊர்மிளை,மாண்டவி கரம் பிடித்தர்)
  15.கூனி/மந்தரை-தசாவதாரம்- மந்திரி சுமந்திரரும் (தோன்றினலே கூனி)
  16.ராவணன் – முள்ளும் மலரும் – ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும்
  17.சூர்ப்பனகை, லட்சுமணன், மாரீசன் – -ஸ்ரீ ராம ராஜ்யம் – சீதா ராம சரித்திரம் (சுந்தர ராமனை மோகித்தாள் ராவண சோதரி சூர்ப்பனகை)
  18.தாடகை-தசாவதாரம்-அம்பை எடுத்தான் வில்லை தொடுத்தான் தாடகையை முடித்தான் -சீர்காழி கோவிந்தராஜன்
  19.அகலிகை-தசாவதாரம்- பொய் வண்ண அரக்கர்களை அழிக்கும் (கௌதம முனிவரின் தேவி இவள் பேர் அகலிகை ஸ்ரீராமா)
  20.அத்திரி முனிவர் – சம்பூர்ண இராமயாணம் – அத்திரி முனிவர் ராம லட்சுமணரை
  21.குகன் – திருமலை தென்குமரி – ஏழுமலை நீ இருக்க (ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!)

  22.ஜடாயு – லவா குசா – ஜகம் புகழும் புண்ணிய கதை (வழியிலே ஜடாயுவால் விபரமெல்லாம் அறிந்தான்)
  23.சுக்ரீவன், – சம்பூர்ண இராமயாணம் – சபரிக்கு ராமனும் (அனுமன் சுக்ரீவனை அழைத்து)
  24.வாலி – தசவாதாரம் – வாஞ்சையோடு வந்த ஆஞ்சநேயரிடம் (வாலி ஆவிதனை காலி செய்து; தூயவனான விபிஷனணனுக்கு )
  25.மாரீசன்-பம்பாய் மெயில்-அந்த கன்னங்கருத்த பையன் (ராமன் அம்புக்கு பயந்து நிதம் வம்பு வார்த்தை பேசும் மாரீசா) MSV பாடி இருக்கிறார்!.
  26.மேகநாதன் – சம்பூர்ண இராமயாணம்-வீணைக்கொடியுடைய வேந்தனே
  27.மண்டோதரி – எங்க ஊர் ராஜா – பரமேஸ்வரி, ராஜேஸ்வரி (மண்டோதரி, குண்டோதரி)
  28.கும்பகர்ணன் – தூங்காதே தம்பி தூங்காதே – (கும்பகர்ணனணை போல் படுத்திருந்தா மூடன்)
  29.விபிஷணன்- சம்பூர்ண இராமயாணம்-அறநெறி மறந்த தமையனை துறந்து அபயம் புகுந்த விபிஷணனை
  30.பரசுராமன் – தசவாதாரம் – தாயென்றும் பாராது தாயை (பரசுராமன் எனும் பெயரை புனைந்தோனே)
  31.இந்தரஜித்- கலைஞன் – இந்தரஜித் (எடக்கு முடுக்கான சரக்கு)
  32.தாரா – அரசிளங்குமரி – தாரா அவர் வருவாரா
  33.அங்கதன் – நீல மலர்கள் – அங்கத நாட்டு ராஜகுமாரி
  34.சபரி – சுவாமி ஐய்யப்பன் – சபரி மலையில் நல்ல

 9. தேவா..

  ம்ணிவேல், அசரடித்து விட்டீர்கள்…

  நான் கேட்ட பாடல்களில் இருந்து…

  1. ராமன் கதை – சிப்பிக்குள் முத்து – தசரதன்
  2. சீதைக்கு ஒரு – ராசாவே உன்ன ந்ம்பி – இராவணன்
  3. வரம் தந்த – சிப்பிக்குள் முத்து – கம்பன்,
  4. ராமன் – ராகவேந்தர் – ஜனகன்,யசோதா, வசிஷ்ட,
  5. தூங்காதே தம்பி தூங்காதே – தூங்காதே தம்பி தூங்காதே – கும்பகர்ணன்
  6. நெற்றிக்கன் – ராமனின் மோகனம் – இராமன்
  7. ராமர நெனக்கும் அனுமார் – அரண்மனைக்கிளி – அனுமன்
  8. இந்திரஜித் – கலைஞன் – இந்திரஜித்
  9. சீதா ரமா சரிதம் – ஶ்ரீ ராம ராஜியம் – சூர்ப்பனகை, மாரீசன்

 10. மணிவேல்

  அனைவருக்கும் நன்றி!
  * தமிழ் திரை இசையில், ராமாயணத்தைப் பற்றி மிகக் குறைவான பாடல்களே இருப்பதாக தோன்றுகிறது.
  * பெரும்பான்மையான பாடல்களை எழுதியவர் A.மருதகாசி. (சம்பூர்ண இராமாயணம், தசாவதாரம், லவா குசா, பம்பாய் மெயில் 109)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s