பொன்மலை!

தொடர்புடைய பாடல்கள்:

‘நன்று போர் வலி, நன்று போர் ஆள்வலி, வீரம்
நன்று, நோக்கமும் நன்று, கைக் கடுமையும் நன்று,
நன்று கல்வியும், நன்று நின் திண்மையும் நலனும்’
என்று கைம்மறித்து இராவணன் ‘ஒருவன் நீ’ என்றான்

‘அஞ்சினான் அலன், அயன்று அந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன், துளங்கினான்’ என்பது துணியா
‘எஞ்சில் இவ் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வன்’ என்று எண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினன் பாரின்மேல் நடந்தான்.

உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி அங்கைகள் இருபதும் பற்றிப் பண்டு அரன் மா
வெள்ளியங்கிரி எடுத்தனன் வெள்கினான் என்ன
எள்ளில் பொன்மலை ஒடுக்கலுற்றான் என எடுத்தான்

அடுத்த நல்லுணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே
தொடுத்த வெண்வகை மூர்த்தியைத் தூக்கி வெண்பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்

தலைகள் பத்தொடும் தழுவிய தசமுகத் தலைவன்
நிலைகொள் மாக்கடல் ஒத்தனன், கரம் புடை நிமிரும்
அலையை ஒத்தன, அதில் எழு மாமதியை ஒத்தான்
இலைகொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான்.

எடுக்கல் உற்றவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து உயிர்ப்புற்றான்
இடுக்கில் நின்ற அம் மாருதி புகுந்து எடுத்து ஏந்தித்
தடுக்கலாததோர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான்

தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்
தகவு கொண்டதோர் நண்பு எனும் தனித் துணை அதனால்,
அகவு காதலால் ஆண்தகை என்னினும் அனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.

மையல் கூர் மனத்து இராவணன் படையினான் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேறக்
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
பொய் இலாதவன் நின்றிடத்து அனுமனும் போனான்.

Advertisements

One thought on “பொன்மலை!

 1. Karunakaran (@kskarun)

  “மிடுக்கு இலாமையின்” – கம்பர் வைணவப் பிரபந்தங்களை எவ்வளவு கற்றுணர்ந்தவர் என்பதற்கு இது ஒரு சான்று.

  “கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
  எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
  ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
  மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்”

  இது கண்ணனுடைய அவதாரத்தைக் குறித்து பெரியாழ்வார் பாடும் பாட்டு. படுக்க வைத்தால் தொட்டில் உடையுமாறு உதைக்கிறான். கையில் எடுத்துக்கொண்டால் இடுப்பை முறிக்கிறான். கைகால்களைக் கட்டி அணைத்துக் கொண்டால் வயிற்றில் எற்றுகிறான். இவற்றைப் பொறுக்கும் வலிமை இல்லாததால் நான் மெலிந்தேன் என்று யசோதை தன் தோழியிடம் கூறுகிறாள்.

  “மிடுக்கிலாமை” என்ற சொற்றொடரை பெரியாழ்வார் யசோதைக்குப் பயன்படுத்தியதை இங்கு கம்பர் இராவணனுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s