குரங்கு கையில் சிக்கிய விபீஷணன்

தொடர்புடைய பாடல்கள்:

முற்றிய குரிசிலை ‘முழங்கு தானையின்
உற்றனர் நிருதர் வந்து’ என்ன ஒன்றினார்,
‘எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்’ என்று இடை
சுற்றினர் உரும் எனத் தெழிக்கும் சொல்லினார்.

‘தந்தது தருமமே கொணர்ந்துதான்; இவன்
வெம் தொழில் தீவினை பயந்த மேன்மையான்,
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்
சிந்தனை முடிந்தன’ என்னும் சிந்தையார்.

‘இருபது கரம், தலை ஈர்ஐந்து என்னும் அத்
திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ?’ என்பார்,
‘பொரு தொழில் எம்மொடும் பொருதி போர்’ என்பார்,
ஒருவரின் ஒருவர் சென்று, உறுக்கி ஊன்றுவார்.

‘பற்றினம் சிறையிடை வைத்து, பார் உடைக்
கொற்றவர்க்கு உணர்த்துதும்’ என்று கூறுவார்;
‘எற்றுவது அன்றியே இவனைக் கண்டு இறை
நிற்றல் என் பிறிது?’ என நெருக்கி நேர்குவார்.

‘இமைப்பதன்முன் விசும்பு எழுந்து போய பின்,
அமைப்பது என் பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ?
குமைப்பது நலன்’ என முடுகிக் கூறுவார்.

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்,
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்,
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்,
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்.

விலக்கினர் படைஞரை; வேதம், நீதி நூல்,
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார்,
‘சலக் குறி இலர்’ என அருகு சார்ந்தனர்
புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s