தூங்காத விழிகள் நான்கு

தொடர்புடைய பாடல்கள்:

கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்,
சீதையை நோக்கி, தம்பி திருமுக நோக்கித் ‘தீராக்
காதலன் ஆகும்’ என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
‘யாதினும் இனிய நண்ப, இருத்தி ஈண்டு எம்மொடு’ என்றான்.

அடிதொழுது உவகை தூண்ட, அழைத்தனன் ஆழி அன்ன
துடி உடைச் சேனை வெள்ளம் பள்ளியைச் சுற்ற ஏவி
வடிசிலை பிடித்து வாளும் வீக்கி வாய் அம்பு பற்றி
இடி உடை மேகம் என்ன இணை அடி ஏத்தி நின்றான்.

‘திருநகர் தீர்ந்த வண்ணம் மானவ, தெரித்தி’ என்னப்
பருவரல் தம்பி கூறப் பரிந்தவன் பையுள் எய்தி
இரு கண் நீர் அருவி சோரக் குகனும் ஆண்டு இருந்தான், ‘என்னே
பெருநிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும்’ என்னா.

மாலைவாய் நியமம் செய்து, மரபுளி இயற்றி, வைகல்
வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர், வரிவில் ஏந்திக்
காலைவாய் அளவும் தம்பி இமைப்பு இலன் காத்து நின்றான்.

வெயில்விரி கனகக் குன்றத்து எழில் கெட இலகு சோதிக்
கயில்வரி வயிரப் பைம்பூண் கடுந்திறன் மடங்கல் அன்னான்
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை ‘நாமே
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நாள் எய்துக’ என்றான்.

மறம் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றித்
‘துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல்’ என்று போனாள்.

மற்றவள் இறைஞ்சி ஏக, மாமலர்த் தவிசு நீங்காப்
பொன் தொடியோடும் ஐயன் துயில் தரும் புன்மை நோக்கி
இற்றதோர் நெஞ்சன் ஆகி இருகண் நீர் அருவி சோர
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலைதனின் நின்றான்.

தும்பியின் துழாத்தில் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்,
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவிசோர் குன்றின் நின்றான்.

Advertisements

3 thoughts on “தூங்காத விழிகள் நான்கு

 1. dagalti (@dagalti)

  சிறப்பான பாடல்கள்.
  எனக்கு மிகப்பிடித்த இடம், பரதனும் குகனும் சந்திக்கும் இடம். கம்பனின் dramatic genius.
  இலக்குவனுக்கு பரதன் மீது கோவம் என்பது நமக்குத் தெரியும். பரதனுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட இலக்குவனைப் பற்றி பரிவாக, உயர்வாக பேசுவான்.

  //துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை ‘நாமே
  எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நாள் எய்துக’ என்றான்.//
  Brilliant!

  இந்தப் பாடலை நான் படிச்ச ஞாபகமில்லை. மிகைப்பாடல்னு போட்டுட்டாங்களான்னு பார்க்கணும்.

  1. Karunakaran (@kskarun)

   @dagalti: ஆம். இதுவும் அடுத்த இரு பாடல்களும் மிகைப் பாடல்களாகத்தான் கொடுக்கப் பெற்றுள்ளன. உ.வே.சா. பதிப்பில் (1972) காணப்படும் குறிப்பு இது: “இதன்பின் மூன்று பாடல்கள் இந்நூல் நிலையத்தின் முந்தைய பதிப்புக்களிலும், வை.மு.கோ. உரைப் பதிப்பிலும், பல ஏடுகளிலும் காணப்படுகின்றன; பிற பழைய பதிப்புகளில் அவை இல்லாததோடு, ஈண்டைக்கு இன்றியமையாதவை அல்லவாதலின், மிகைப் பாடல்களாகக் காட்டப்படுகின்றன.”

   “எனக்கு மிகப்பிடித்த இடம், பரதனும் குகனும் சந்திக்கும் இடம். கம்பனின் dramatic genius”
   உண்மை! உண்மை! உண்மை!

   என் தந்தை எனக்குக் கம்பராமாயணத்தில் அறிமுகப் படுத்திய முதல் சில பாடல்கள் “கங்கைப் படலம்” மற்றும் “கங்கை காண் படலம்” இரண்டிலிருந்தும் தான்.

   குகன் பற்றிய கம்பன் வர்ணனை, குகன் உரைத்த வீர உரை, இருவரின் சந்திப்பு – இவை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டுவன.

 2. Karunakaran (@kskarun)

  “பெருநிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும்”

  இதே போன்ற கருத்தை நகர் நீங்கு படலத்திலும் காணலாம். இராமன் காடு செல்கின்றான் என்று கேட்ட மக்களின் நிலை பற்றிக் கூறுகையில்:

  “‘மண் செய்த பாவம் உளது என்பார், மா மலர்மேல்
  பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்.
  புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர்
  கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார்”

  நிலமகள், திருமகள் இருவரின் தீவினையால்தான் இது நேர்ந்தது என்று மக்கள் புலம்புவதாகக் காட்டியிருக்கிறார் கம்பர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s