தோள் தந்தார், தோளே தந்தார்

தொடர்புடைய பாடல்கள்:

கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
அளவு அறு செம்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்,
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்.

தேரில் போர் அரக்கன் செலச் சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன், பரிந்தான்,
‘சீரில் செல்கின்றது இல்லை இச் செரு’ எனும் திறத்தால்,
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான்.

‘நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் போர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும் ஓர் வெறுமையை. மெல்லிய எனினும்
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின் மேல்’ என்றான்

‘நன்று, நன்று!’ என நாயகன் ஏறினன் நாமக்
குன்றின் மேல் இவர் கோள் அரி ஏறு எனக் கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்.

இம்பரான் எனின் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில்;
தும்பை சூடிய இராவணன் முகம் தொறும் தோன்றும்;
வெம்பு வஞ்சகர் விழி தொறும் திரியும்; மேல் நின்றான்
அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும் அனுமன்

‘குடக்கதோ? குணக்கதேயோ? கோணத்தின் பாலதேயோ?
தடத்த பேர் உலகத்தேயோ? விசும்பதோ? எங்கும் தானோ?
வடக்கதோ? தெற்கதோ? என்று உணர்ந்திலென் மனிதன் வல்வில்
இடத்ததோ? வலத்ததோ? என்று உணர்ந்திலென், யானும் இன்னும்

ஆழி அம் தடந்தேர், வீரன் ஏறலும், அமலச் சில்லி
பூழியிற் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோள் என்று ஏத்தினார் மலர்கள் தூவி.

 

Advertisements

One thought on “தோள் தந்தார், தோளே தந்தார்

 1. Karunakaran (@kskarun)

  மேலும் சில செய்திகள்:
  முதல் பாட்டு – “துளவோடு தும்பையும்” – துளசி (துளப) மாலை இராமன் பரம்பொருள் என்று உணர்த்துவதற்கு.

  “காற்றையே மேற்கொண்டானோ” என்ற பாடலில், அதற்கு முந்தய வரி
  “ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே, அமரின் ஆற்றல்! – ஆற்றல் மிக்க கருடனும் கூட அனுமன் இவ்வாறு செய்த போரினைச் செய்ய இயலுமோ?

  கடைப் பாட்டு – “பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர்” – இராமன் தேர் ஏறிய உடன் அது பூமியில் சற்றே புதைந்ததாம். அதைக்கண்டு தேவர்கள், இவ்வளவு உடற்பாரம் உடைய இராமனைக் கருடன் தாங்குவது இருக்கட்டும், மாருதி தாங்கினானே என்று வியந்து “அனுமன் தோளை ஏத்தினார்”.

  வைணவசம்ப்ரதாயத்திலேகருடனையும்அனுமனையும்பெரிய திருவடி, சிறியதிருவடிஎன்று குறிப்பது வழக்கம் – அவர்கள் எப்போதும் திருமாலுக்கு அடியவர்கள் என்பதால். இவ்விரு பாடல்களிலும், இரு அடியவர்களையும் இணைத்துக் கூறியிருப்பது சிறப்பு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s