சொல்லால் அடித்தவள்

தொடர்புடைய பாடல்கள்:

கோபமும் மறனும் மானக் கொதிப்பும் என்று இனைய எல்லாம்,
பாபம் நின்ற இடத்து நில்லாப் பெற்றிபோல், பற்று விட்ட,
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின், புக்க
தாபமும் காமநோயும் ஆர் உயிர் கலந்த அன்றே.

கரனையும் மறந்தான், தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான், உற்ற பழியையும் மறந்தான், வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான், கேட்ட மங்கையை மறந்திலாதான்.

சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தை தானும்
உற்று, இரண்டு ஒன்றாய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல்ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர், ஞானம் இன்றேல் காமத்தைக் கடத்தல் ஆமோ?

மயிலுடைச் சாயலாளை வஞ்சியாமுன்னம், நீண்ட
எயில் உடை இலங்கை நாதன் இதயம்ஆம் சிறையில் வைத்தான்,
அயில் உடை அரக்கன் உள்ளம் அவ் வழி மெல்ல மெல்ல
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய்போல் வெதும்பிற்று அன்றே.

Advertisements

4 thoughts on “சொல்லால் அடித்தவள்

 1. amas32 (@amas32)

  இராவணனுக்கு சனி, சூர்ப்பனகை வாயிலாக வந்து காது வழியாக உள்ளே புகுந்துவிட்டான் போல. சூர்ப்பனகை விவரித்த சீதையின் அழகைக் கேட்டு இராவணன், காமமுற்று, அவளை physicalஆ எடுத்து செல்லும் முன்னரே மனதில் சிறை வைத்து விட்டான். மாற்றான் மனைவியை எண்ணத்தினால் களங்கப் படுத்தி விட்டான். சூர்ப்பனகையின் சொல்லுக்கு அத்தனை வீர்யம் இருந்திருக்கிறது!

  அருமையாக விளக்குகிறீர்கள், நன்றி சொக்கரே :-))

  amas32

 2. dagalti (@dagalti)

  பிரமாதமான இடம். பற்பல சிறப்பான பாடல்கள். வழக்கம்போல நல்லா சொல்லியிருந்தீங்க.

  சூர்ப்பனகை rejection இடமும் சரி, அவள் ராவணணுக்கு சொல்லும் இடமும் சரி, கம்பன் ஒரு psychology expertனு நிரூபிக்கிற இடங்கள்.

  சூர்ப்பனகை சொல்றா.. பத்தி சொல்லிகிட்டேன் போகலாம். ஆனா எதுக்கு:


  சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
  “நெல் ஒக்கும் புல்” என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ

  அப்படின்னு சொல்லுவா.

  எதுக்கு நான் உனக்கு சொல்லிட்டு இருக்கேன். நீ எப்படியும் ஆவல் தாங்காம நாளைக்கே போய் நேர்ல பார்க்கப் போற:
  நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ

  அவ சொன்னதை வைச்சே சீதையை கற்பனை செஞ்சு நேரில் பார்ப்பது போல தோன்றிவிடும் ராவணனுக்கும். தான் பார்க்கும் உரும் (தன் தாபத்தின் ரூப வடிவம்) சீதை தானா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ள சூர்ப்பனகையைக் கூப்பிடுறான். அங்க வந்து பார்த்ததும் அவளுக்குத் தெரிவது ராமனின் உருவம்.

  என்ன கற்பனை. என்ன mindblowing moment. They see their respective lust!
  இந்த நீ….ளமான postல கடைசீல இந்த இடத்தைப் பத்தி எழுதுயிருந்தேன்: http://dagalti.blogspot.in/2010/10/of-woody-kambar-rorschach-and-yours.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s