நீங்கள் கோப்பையா? கடலா?

தொடர்புடைய பாடல்கள்:

கறுத்த மா முனி கருத்தை உன்னி, ‘நீ
பொறுத்தி’ என்று அவன் புகன்று ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா வசிட்டன் கூறினான்.

‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே

குருவின் வாசகம் கொண்டு கொற்றவன்
‘திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்று’ என,
‘வருக என்றனன்’ என்னலோடும் வந்து
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான்

வந்த நம்பியைத் தம்பி தன்னோடு
முந்தை நால் மறை முனிக்குக் காட்டி ‘நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ இவர்க்கு,
எந்தை! தந்தனன்; இயைந்த செய்க’ என்றான்.

Advertisements

3 thoughts on “நீங்கள் கோப்பையா? கடலா?

 1. amas32 (@amas32)

  //‘திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்று’ //திருவின் கணவன் என்று நடக்கப் போவத்தை முன் கூட்டியே சொல்லிவிடுகிறாரே கம்பன் தசரதன் வாயிலாக! 🙂

  விச்வாமித்திரரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார் தசரதன். சொக்கரே, நீங்கள் சொன்ன மாதிரி, குல குரு ஸ்ட்ராங்கா சிபாரிசு செய்த பின் தயக்கமென்ன?

  amas32

 2. PVR

  I loved this, Naga. Your good voice also helps.

  A strange thought occurred. I remembered my serious misgivings, sorrow and anxiety when a decision was taken to send my kids to Schooling. (Happened twice – both for the elder and the younger! :)). I also remembered what I told the teachers on day1. So, a parent remains a parent even in Ithihasa.

  The role of a Raja Guru. It is possible, Dhasarathan might have conceded to the request of Viswamithran. Still, முடுகும் ஆறுபோல், the decision came out – thanks to Vasishtar.

 3. dagalti (@dagalti)

  அப்பொ படிச்சப்போ வந்த சந்தேகம் இப்பொ ஞாபகத்துக்கு வந்துச்சு: ‘திருவின் கேள்வன்’னு எப்படி தசரதர் சொல்லலாம்?
  ஆசிரியர் கூற்றுல வரலாம். ஆனா தசரதரே சொல்லலாமா?

  நம்பி-னா ஆண்களில் சிறந்தவன்’னு சொன்னீங்க. இன்னும் gloriousஆவே ஒரு அர்த்தம் சொல்லுவாங்க. எல்லா குணங்களும் நிறைந்தவன்’னு.

  திருநெல்வேலி பக்கம் திருக்குறுங்குடி’ன்ற ஊர்ல பெருமாளுக்கு சமஸ்கிருதத்துல பேர்: சுந்தர பரிபூரணன். தமிழ்ல: அழகிய நம்பி. (மலைமேல முதுகொடிய ஒரு ஓட்டை ஜீப்ல போகணும் இவரைப் பார்க்க) அப்பொ தான், ஆஹா நம்பி’ன்ற சொல்/பேருக்கு இவ்வளவு சிறப்பான ஒரு அர்த்தம் இருக்குன்னு தெரிஞ்சது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s